Home இந்தியாஅச்சுறுத்தி பணம் பறிக்க முற்பட்டதாக கூறி இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது

அச்சுறுத்தி பணம் பறிக்க முற்பட்டதாக கூறி இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர் வினோத் வர்மா கைது

by admin


அச்சுறுத்தி பணம் பறிக்க முற்பட்டதாக கூறி இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் வினோத் வர்மாவை, சத்தீஸ்கர் மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் வினோத் வர்மா பிபிசி உட்பட பிரபல செய்தி ஊடகங்களில் பணியாற்றியுள்ளார். இவர் சத்தீஸ்கர் மாநிலத்தில் இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் மீதான போலி வழக்குகள் தொடர்பில் செய்திகள் சேகரித்து வந்ததாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள சிலரை அச்சுறுத்தி பணம் பறிக்க முற்பட்டதாகக் கூறி மூத்த பத்திரிகையாளர் வினோத் வர்மாவை, மாநில பொலிசார் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் வைத்து கைது செய்த நிகழ்வு இந்திய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

வினோத் வர்மாவிடமிருந்து இக் குற்றம் தொடர்பான இறுவெட்டுக்கள் மற்றும் பணம் தம்மால் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சதீஸ்கர் மாநிலத்தின் பொலிசார் குறிப்பிடுகின்றனர். கடந்த சில நாட்களின் முன்னர் கர்நாடக பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், பத்திரிகையாளர்மீது மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையாகவும் இது கருதப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More