200
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உலகின் முன்னிலை கொல்ப் வீரர்களில் ஒருவரான டைகர் வுட்ஸ் குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. கவனயீனமாக வாகனத்தைச் செலுத்தியதாக வுட்ஸ் மீது புளொரிடா நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. தண்டனையை தளர்த்திக் கொள்ளும் நோக்கில் வுட்ஸ் இவ்வாறு குற்றத்தை ஒப்புக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாகனம் செலுத்திய போது போதை தரும் மாத்திரைகளை உட்கொண்டிருந்தார் என வுட்ஸ் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டால் வுட்ஸிற்கான தண்டனை மிகவும் குறைவானதாக அமையும் என சட்ட வல்லுனர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.
Spread the love