Home இலங்கை அரியாலையில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து மண்டைதீவு கடற்படை முகாமில் தேடுதல்

அரியாலையில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து மண்டைதீவு கடற்படை முகாமில் தேடுதல்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

அரியாலை – உதயபுரத்தில் கடந்த 22 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரிக்க கொழும்பில் இருந்து சென்ற விசேட குழுவினர்  நேற்றையதினம் மண்டைதீவு கடற்படை முகாமிலும் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

இளைஞனை நோக்கி துப்பாக்கிப் பரயோகம் மேற்கொண்ட வாகனத்தினை மண்டைதீவு கடற்படை முகாமில் கண்டதாக காவல்துறையினருக்கு கிடைத்த    இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த தேடுதல் இடம்பெற்றுள்ளது.

கடற்படை முகாமில் வாகனத்தை சோதனை செய்வதற்கான அனுமதி  நீதிமன்றத்தில் பெறப்பட்டு அதனடிப்படையில் நேற்று முன்தினம் மாலை திடீரெனப் சென்ற  குழுவினர் கடற்படை முகாமில் அவ்வாறான வாகனம் ஏதும் உள்ளதா  என்பது குறித்து சோதனை நடத்தியுள்ளனர்.
எனினும் அங்கு அத்தகையதொரு தடயமும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ள குறித்த குழுவினர்  தொடர்ந்தும் பல கோணங்களில் விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

அரியாலையில் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டமை குறித்து  விசாரிக்க   விசாரணை அதிகாரிகள்   யாழ்    செல்கின்றனர்

Oct 25, 2017 @ 10:47

யாழ்.அரியாலை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை  இடம்பெற்ற   துப்பாக்கி பிரயோகத்தில்   உயிரிழந்துள்ள இளைஞனின் கொலை தொடர்பில்    விசாரணை மேற்கொள்வதற்காக  கொழும்பில் இருந்து விசேட குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் நாளை   யாழ்ப்பாணம்  செல்லவுள்ளனர்.

இந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்திர் குருநகர் பகுதியை சேர்ந்த 25 வயதான  டொன் பொஸ்கோ ரிக்மன்   எனும் இளைஞன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டது காவல்துறையினர்தான என    உயிரிழந்த இளைஞருடன் சென்ற  நபர் தெரிவித்ததுள்ள நிலையில் இது குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக  காவல்துறைமா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் இந்த குற்றத் தடுப்பு விசாரணை அதிகாரிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தரப்பு குறித்த துப்பாக்கிப்  பிரயோகத்தினை தாம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்து வருகின்ற நிலையில் விசாரணை அதிகாரிகள் நாளை   யாழ்ப்பாணம்  செல்லவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இணைப்பு 2 –  யாழ்.துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு.

Oct 22, 2017 @ 17:23

யாழ்.அரியாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். குருநகர் பகுதியை சேர்ந்த டொன் பொஸ்கோ ரிக்மன் (வயது 25) எனும் இளைஞனே வைத்திய சாலையில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார்.

அரியாலை கிழக்கு உதயபுரம் முதலாம் குறுக்கு தெரு பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் நடைபெற்றது. குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று இரவு 9 மணியளவில் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
பின்னால் இருந்தே சுட்டனர். 
“நானும் ரிக்மனும் , மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டு இருந்த வேளை எமக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த சிவில் உடை தரித்த இருவர் ரிக்மனுக்கு பின்புறமாக துப்பாக்கி பிரயோகத்தினை நடத்தி விட்டு தப்பி சென்று விட்டனர் ” என உயிரிழந்த இளைஞனுடன் பயணித்த இளைஞர் தெரிவித்தார்.
தொலைபேசி அழைப்பை அடுத்து வெளியில் சென்றவன். 
எனது மகன் கடற்தொழில் செய்பவர் , இன்றைய தினம் மதியம் வீட்டில் இருந்து உணவருந்திக்கொண்டு இருந்த வேளை தொலைபேசி அழைப்பொன்று மகனுக்கு வந்தது , அதை அடுத்து ” இதோ வாறன் ” என கூறி உணவையும் உண்ணாது வெளியில் சென்று விட்டான். வெளியில் சென்று 10 நிமிடத்திற்குள் மகன் மீது சூட்டு உள்ளார்கள் என உயிரிழந்த இளைஞனின் தாயார் தெரிவித்தார்.
அதிக இரத்த போக்கால் மரணம். 
இளைஞனின் சுவாச குழாய்களை துப்பாக்கி ரவைகள் துளைத்து சென்றமையினால் அதிகளவான இரத்த போக்கு ஏற்பட்டமையினால் தான் மரணம் சம்பவித்ததாக வைத்திய சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் கைது செய்வோம். 
துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்து உள்ளோம். துப்பாக்கி சூட்டை நடத்தியவர்களை விரைவில் கைது செய்வோம். என பொலிஸ் தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.
மூன்று பொலிஸ் குழுக்கள் களத்தில் ..
அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை இரகசிய பொலிஸ் பிரிவு , யாழ்.பொலிஸ் நிலைய தலைமை பொறுப்பதிகாரியின் கீழான குழுவினர் மற்றும் யாழ்.பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பிரிவினர் என மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணை நடவடிக்களை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழில் துப்பாக்கிச்சூடு –  இளைஞன் படுகாயம்
Oct 22, 2017 @ 11:12

யாழ்.குருநகரை அண்மித்த பகுதியில்  இடம்பெற்ற  துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர்  படுகாயமடைந்துள்ளார்.  உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞனே துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.  காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்.காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      
pCloud Premium

Related News

1 comment

Karunaivel Ranjithkumar October 27, 2017 - 8:51 pm

Provided the fact that this investigation would carried out in honest way. Other wise those culprits may nicely escaped in this juncture.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More