குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக தெரிவித்து கட்டலோனிய கருத்தெடுப்பு வாக்கெடுப்பில் முக்கிய பங்காற்றிய எட்டு தலைவர்களை ஸ்பெயின் உயர் நீதிமன்றம் கைது செய்து சிறை வைத்துள்ளது. கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் மற்றும் அவரது 13 சகாக்கள் ஸ்பெய்னின் மட்ரீட் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமெனவும் தவறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையிலேயே குறித்த எட்டு தலைவர்களும் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்னனர். கலகம் செய்தல், தேச துரோகம் மற்றும் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள குறித்த கட்டலோனியத் தலைவர்கள் இன்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த நிலையிலேயே கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
அதேவேளை பதவி நீக்கம் செய்யப்பட்ட கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் ( Carles Puigdemont ) மற்றும் நான்கு தலைவர்கள் நீதிமன்றம் அனுப்பிய அழைப்பாணையை நிராகரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இந்த விசாரணை அரசியல் நோக்கம் கொண்டது என தற்போது பெல்ஜியத்தில் தங்கியுள்ள கார்லெஸ் பூகிடமண்ட் தெரிவித்துள்ளார்.
கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி நாடு திரும்ப மாட்டார்
Nov 2, 2017 @ 04:02
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனிய முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் ( Carles Puigdemont ) நாடு திரும்ப மாட்டார் என அவரது பெல்ஜிய சட்டத்தரணி அறிவித்துள்ளார். நாட்டுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக கட்டலோனிய ஜனாதிபதி மீது ஸ்பெய்ன் மத்திய அரசாங்கம் குற்றம் சுமத்தி அவரை பணி நீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறெனினும் கட்டலோனிய ஜனாதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க அவர் ஸ்பெய்ன் திரும்ப மாட்டார் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார். தேவை என்றால் பெல்ஜியத்தில் வைத்து அவரிடம் விசாரணை நடத்தப்பட முடியும் என சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
கட்டலோனியாவின் முன்னாள் ஜனாதிபதி கார்லெஸ் பூகிடமண்ட் மற்றும் அவரது 13 சகாக்கள் நாளைய தினம் ஸ்பெய்னின் மட்ரீட் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. நீதிமன்றில் முன்னிலையாகத் தவறினால் அவர்களுக்கு எதிராக பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்படக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.