Home உலகம்பிரெக்சிற் குறித்த வாக்கெடுப்பின் பின்னர் பிரித்தானியாவிற்கு பணிபுரிய வரும் தாதிமார்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி

பிரெக்சிற் குறித்த வாக்கெடுப்பின் பின்னர் பிரித்தானியாவிற்கு பணிபுரிய வரும் தாதிமார்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது குறித்த சர்வஜனவாக்கெடுப்பிற்கு பின்னர் பிரித்தானியாவிற்கு பணிபுரிய வரும் தாதிமார்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக  புள்ளி விபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

பிரித்தானியாவிற்கு பணிபுரிவதற்காக வரும் தாதிமாரின் எண்ணிக்கை 89 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதை  வெளியாகியுள்ள புள்ளிவிபரங்கள் காண்பித்துள்ளன. மேலும் தகுதிபெற்ற ஐரோப்பிய மருத்துவபணியாளர்கள் பிரித்தானியாவிலிருந்து வெளியேறுவதும் பிரித்தானியாவில் பயி;ற்சியளிக்கப்பட்ட தாதிமார்கள் வெளியேறுவதும் இந்த புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது. தொழிற்சங்க தலைவர்கள் இது அச்சம் தரும் நிலைமை என வர்ணித்துள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More