151
அமெரிக்காவின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான பிரதி இராஜாங்க செயலாளர் தோமஸ் ஸ்செனன் இன்று இலங்கை செல்லவுள்ளார். பங்களாதேஸ் சென்றுள்ள அவர் அந்த பயணம் நிறைவுற்ற நிலையில் இன்று இலங்கைக்கு பயணம் செய்யவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தோமஸ் ஸ்செனன் தனது இலங்கைப் பயணத்தின் போது இலங்கையின் உயர்மட்ட அரசியல் தலைவர்களையும் அரச சார்பற்ற அமைப்புக்களையும் சந்தித்துக் கலந்துரையாட திட்டமிட்டுள்ளார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது மேலும், தனது இலங்கை பயணத்தினை நிறைவு செய்து நாளை அமெரிக்கா திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love