குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 25 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டுமென உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். பெண்கள் பிரதிநிதித்துவம் செய்யும் உள்ளுராட்சி மன்றங்களில் ஊழல் மோசடிகள் மிகவும் குறைந்தளவிலேயே இடம்பெறுகின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் 25 வீதம் பெண்களின் பிரதிநிதித்துவம் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மாத்தறை தெய்யந்தர தேசிய பாடசாலையில் நிர்மானிக்கப்பட்ட கட்டடமொன்றை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.