128
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் 15000 தொன் பெற்றோலை இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளது. இலங்கையின் பெற்றோல் சந்தையில் 16 வீதத்தை லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் நிரம்பல் செய்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் எரிபொருள் தட்டுப்பாட்டை கருத்திற் கொண்டு அவசரமாக இந்தியாவிடமிருந்து 15000 தொன் பெற்றோலை, லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் கொள்வனவு செய்ய உள்ளது. கொள்வனவு செய்யப்பட்ட பெற்றோல் எதிர்வரும் 9 அல்லது 10ம் திகதியில் நாட்டை வந்தடையும் என தெரிவிக்கப்படுகிறது.
Spread the love