குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கொரிய தீபகற்பத்தில் பாரிய யுத்தமொன்றை முன்னெடுக்கும் நோக்கில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக வடகொரியா குற்றம் சுமத்தியுள்ளது. இந்த நோக்கத்தின் ஓர் முயற்சியாகவே அண்மையில் ட்ராம்ப், ஆசிய நாடுகளுக்கான பயணத்தை மேற்கொண்டிருந்தார் என சுட்டிக்காட்டியுள்ள வடகொரிய வெளிவிவகார அமைச்சு ட்ராம்பின் ஆசிய பயணத்தின் போது அவரது உண்மை முகம் வெளிப்பட்டது என தெரிவித்துள்ளது.
உலக சமாதானத்தை சீர்குலைக்கும் ஓர் அழிவாளியாகவே ட்ராம்பை நோக்குவதாகவும் அமெரிக்காவின் எச்சரிக்கைகள், வடகொரியாவின் அணுவாயுத பரிசோதனைகளை தடுத்து விடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.