வேறும் கட்சிக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் என சுதந்திரக் கட்சியின் உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். வேறும் கட்சிகளை ஆதரித்து அவர்களுக்காக பிரச்சாரத்தில் ஈடுபடுவோர் கட்சியிலிருந்து நீக்க்பபடுவர் என தெரிவித்துள்ளார். கட்சியை ஐக்கியப்படுத்தும் நோக்கில் கட்சியின் உறுப்பினர்கள் தொடர்பில் நெகிழ்வுப் போக்கான கொள்கைகள் முன்னதாக பின்பற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கட்சி கடுமையான தீர்மானங்களை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். வேறும் அரசியல் கட்சிகளுக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு அவற்றை ஆதரிக்கும் உறுப்பினர்களுக்கு தொடர்ந்தும் ஆதரவளிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேறும் கட்சிக்காக பிரச்சாரம் செய்வோர் சுதந்திரக் கட்சியிலிருந்து நீக்கப்படுவர் – மஹிந்த அமரவீர:-
144
Spread the love