கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தின் சிறந்த நிதி முகாமைத்துவம், கணக்காய்வு என்பவற்றின் சிறந்த செயற்பாடுகளுக்காக ஜனாதிபதியினால் விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தினால் நிதிப்பிரமாணங்கள் கணக்காய்வுகள் நிதி நடவடிக்கைகள் நிதிகளைக் கையாளுதல் போன்;றவற்றில் சிறப்பாகச் செயற்பட்டமைக்காக பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் வைத்து ஜனாதிபதியால் இன்று (13-11-2017) விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின் பின்னரான மீள்குடியமர்வு மற்றும் மக்களுக்கான உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வரும் கிளிநொச்சி மாவட்டச்செயலகமானது சிறந்த முறையில் சேவையாற்றி வருவதுடன் கடந்த 2015ம் ஆண்டில் தேசிய உற்பத்தித்திறன் விருதினைப் பெற்றுக்கொண்டது.
இதேவேளை அண்மையில் நடைபெற்ற சமுகப்பாதுகாப்பு நிதியத்தின் அதிகளவானவர்களை இணைத்துக்கொண்டமைக்கான சமுக பாதுகாப்புநிதியத்தின் விருது ஜனாதிபதியினால் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ள நிலையில்; மேற்படி மூன்றாவது விருதியினையும் பெற்றுள்ளமையும் குறிப்பிட்டத்தக்கது.