எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபை தேர்தலின் போது தேசிய அடையாள அட்டை இல்லாதமை காரணமாக மூன்று லட்சம் பேர் வரை வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும் அபாயம் காணப்படுவதாக ஆள்பதிவு திணைக்களத்தின் பணிப்பாளர் வீ. குணதிலக்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள அவர், தங்களது வசிப்பிடத்தை உறுதிப்படுத்த தேவையான உத்தியோகப்பூர்வ ஆவணங்கள் இல்லாதமை காரணமாக மூன்று லட்சம் பேர் வரை தேசிய அடையாள அட்டை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் கலந்தாலோசித்து தேசிய அடையாள அட்டைகள் இல்லாதோருக்கு அதனை பெற்றுக்கொடுக்கும் திட்டமொன்றை விரைவில் நடைமுறை படுத்த ஆள்பதிவு திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.