பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப் விடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 20ம் திங்கட்கிழமை விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் தொடர்பிலான விசாரணைகளின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் 16 விடயங்கள் குறித்து தெளிவுபடுத்துமாறு கோரி ஜனாதிபதி ஆணைக்குழு பிரதமருக்கு ஆவணமொன்றை அனுப்பி வைத்திருந்தது.
இந்த ஆவணத்திற்கு பிரதமர் எழுத்து மூலம் அண்மையில் பதிலளித்திருந்த நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பிரதமர் நேரடியாக சாட்சியமளிக்க வேண்டுமென ஆணைக்குழு கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.