Home இலங்கையாழில் வாள் வெட்டு சந்தேகநபர்களுக்கு பிணை.

யாழில் வாள் வெட்டு சந்தேகநபர்களுக்கு பிணை.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழில்.அண்மைக்காலமாக இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண காவல்துறையினரினால்  கைது செய்யப்பட்ட நான்கு இளைஞர்களில் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவான் மூவரை பிணையில் செல்ல அனுமதித்தார்.

யாழ்ப்பாண  காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் நேற்று புதன்கிழமை இரவு வாள்களுடன் நடமாடினார்கள் என மூன்று இளைஞர்களை  காவல்துறையினர்  கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் இருவர் விடுவிக்கப்பட்டனர். நல்லூர் கோவில் வீதியை சேர்ந்த ஞானசேகரம் விஜித்பாரத் (வயது 21) எனும் இளைஞனை  காவல்துறையினர்  தொடர்ந்து தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

குறித்த நபரின் தகவலின் பிரகாரம் இன்று வியாழக்கிழமை அதிகாலை நல்லூரை சேர்ந்த வரதராஜன் இந்திரஜித் (வயது 21), கல்வியங்காடு பகுதியை சேர்ந்த தவராஜா நிக்சன் (வயது 20) , மற்றும் உரும்பிராய் பகுதியை சேர்ந்த அன்பழகன் சாருக்சன் (வயது 21) ஆகிய மூவரும்  ; கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட நபர்களிடம்  காவல்துறையினர்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் இன்று வியாழக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ். சதிஸ் தரன் முன்னிலையில் சந்தேக நால்வரையும் முற்படுத்தினார்கள்.  அதனை அடுத்து சந்தேக நபர்களில் ,ஞானசேகரம் விஜிதபரத் என்பவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். ஏனைய மூவரையும் பிணையில் செல்ல அனுமதித்தார்.

இதேவேளை வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில்  காவல்துறையினர்  தன்னை தேடிவருவதாக தெரிவித்து இளைஞர் ஒருவர் சட்டத்தரணி கணாதீபன் ஊடாக இன்றைய தினம் நீதிமன்றில் சரணடைந்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More