குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதேசத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ; இன்று காலை 6.00 மணியுடன் தளர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏழு கிராம சேவகர் பிரிவுகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டமே இவ்வாறு தளர்த்தப்பட்டுள்ளது எனவும் எனினும் அந்தப் பகுதிகளில் காவல்துறையினருடன் விஷேட அதிரடிப் படையினர் மற்றும் இராணுவத்தினரும் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஹிந்தொட்டவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு
Nov 19, 2017 @ 03:00
காலி ஹிந்தொட்டவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் நட்டஈட வழங்க உள்ளது. உள்விவகார அமைச்சர் வஜிர அபேவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நட்டஈடு வழங்குமாறு ஜனாதிபதியும் பிரதமரும் பணிப்புரை விடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். கிங்தொட்டவின் தற்போதைய நிலைமை குறித்து கவனம் செலுத்தப்பட்டு அதன் அடிப்படையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதேசத்தில் வாழ்ந்து வரும் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருவதாக அமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.