ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் பிரச்சினையை தீர்த்துவைப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு உதவ சீனா முன்வந்துள்ளது. பங்களாதேஸ் சென்றுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி ( wang yi ) அந்நாட்டுப் பிரதமர் பிரதமர் ஷேக் ஹஸீனாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது ரோஹிங்கியா பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் குறிப்பாக ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் விவகாரம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் மியன்மரில் இடம்பெறும் வன்முறைகளினால் பாதிகப்பட்டுள்ள ரோஹிங்கியா முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் எனவும் அதற்கான உதவிகளை வழங்க சீனா தயாராக உள்ளதாகவும் சீன வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.