குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பொறுப்பற்ற சில இளைஞர் குழுக்களே வாள் வெட்டில் ஈடுபடுகின்றனர் எனவும் அவ்வாறானவர்களை இனம் கண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ள வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் ரொஷான் பெர்னாண்டோ அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளாதாகவும் தெரிவித்துள்ளார். யாழ்.நகரில் நேற்று மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் தேவையற்று யாரையும் கைது செய்வதில்லை எனவும் நேற்றைய தினம் 11 பேரை சந்தேகத்தில் அழைத்து விசாரித்து உள்ளோம் எனவும் தெரிவித்த அவர் தேவை ஏற்படின் அவர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான குற்ற செயல்களுடன் தொடர்புடையவர்கள் சில பொறுப்பற்ற இளைஞர்கள் தான் எனவும் அவர்களை பயங்கரவாத செயற்பாடுகளுடன் ஒப்பிடு அச்சமடைய தேவையில்லை எனவும் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் தெரிவித்தார்.
அதேவேளை நேற்றைய தினம் சனிக்கிழமை வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்ற பகுதிகளையும் நேரில் சென்று பார்வையிட்டதுடன் , வாள் வெட்டுக்கு இலக்கனவர்களையும் வைத்திய சாலைகளில் நேரில் சென்று வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் சந்தித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.