178
தேசிய தீபாவளி விழா-2016 இன்று (28) பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் அலரி மாளிகையில் இடம்பெற்றது. நாளைய தினம் உலகம் முழுவதுமுள்ள இந்துக்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுவதனை முன்னிட்டு அனைத்து இந்துக்ளுக்கும் ஜனாதிபதியும் பிரதமரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
மத வழிபாடுகளுக்கு முதலிடமளித்து இடம் பெற்றவிழாவில் எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன், அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரமுகர்களுமா பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
Spread the love