266
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
ரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் போது பாரிய தவறுகள் இழைக்கப்பட்டுள்ளதாக உலக ஊக்க மருந்து தடை முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஊக்க மருந்து சோதனைகள் தொடர்பில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாகவும் ஊக்க மருந்து பயன்பாடு குறித்த சோதனைகள் தொடர்பில் திருப்திகொள்ள முடியாது எனவும்குறிப்பிட்டுள்ளது.
சில நாட்களில் சுமார் 50 வீதமான சோதனைகள் நடத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தகவல் உள்ளீட்டு தவறுகள் உள்ளிட்ட பல்வேறு விடங்களில் சிக்கல்கள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love