180
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காங்கேசன்துறை கடலில் மிதந்த 153 கிலோ கிராம் எடையுடைய கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. கடற்படையினரால் இந்தப் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஒரு சந்தர்ப்பத்தில் 55 கிலோ கிராமும் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் 98 கிலோ கிராமும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. நேற்றைய தினம் இந்த கேரள கஞ்சா போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love