குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தொலைபேசி உரையாடல்கள் வெளியே கசிந்தமை குறித்து விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. பிரதமரின் உத்தியோகபூர்வ கைத்தொலைபேசியின் விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தது. மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டிருந்தது.
இவ்வாறு பிரதமரின் அதிகாரபூர்வ தொலைபேசியின் உரையாடல்கள் உள்ளிட்ட விபரங்கள் வெளியானமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என அரசாங்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
சட்ட மா அதிபர் திணைக்களத்தின் உத்தரவிற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இவ்வாறு தகவல்கள் கசிந்தமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது