Home இலங்கை,இணைப்பு 2 – யாழில் 40 லீட்டர் மண்ணெண்ணெய் ஊற்றி ஆயிரம் கிலோ கஞ்சா எரிப்பு.

,இணைப்பு 2 – யாழில் 40 லீட்டர் மண்ணெண்ணெய் ஊற்றி ஆயிரம் கிலோ கஞ்சா எரிப்பு.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.மேல் நீதிமன்ற உத்தரவில் இன்றைய தினம் வியாழக்கிழமை எரியூட்டப்பட்ட கஞ்சா ஆயிரம் கிலோ எனவும் அவற்றை எரிக்க 40 லீட்டர் மண்ணெண்ணைய் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்.மேல் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2016ஆம் ஆண்டு கால பகுதியில் மீட்கப்பட்டு நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் , 18 வழக்கின் சான்று பொருட்களாக இருந்து வழக்கு முடிவடைந்த கஞ்சாவே நீதிமன்ற உத்தரவில் எரித்து அழிக்கப்பட்டது.

 யாழில்.10 கோடி ரூபாய் பெறுமதியான கஞ்சா அழிப்பு:

Nov 23, 2017 @ 07:49

யாழ்.நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குள் கைப்பற்றப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா போதை இன்று தீமூட்டி எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்ற நியாயத்திக்க எல்லைக்குள் கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருள் மன்றில் பாரப்படுத்தப்பட்டு இருந்தன. அவ்வாறு பாரபப்டுத்தப்பட்ட கஞ்சா போதை பொருளில் வழக்குகள் முடிவடைந்த நிலையில் காணப்பட்ட கஞ்சா போதை பொருள் நீதிமன்ற உத்தரவில் எரித்து அழிக்கப்பட்டது.

யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் மற்றும் அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் முன்னிலையில் அவை எரித்து அழிக்கப்பட்டது. அவ்வாறு இன்றைய தினம் எரிக்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 10 கோடி ரூபாய் என தெரிவிக்கப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More