குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாவீரர் தின நிகழ்வுகள் தொடர்பில் பயங்கரவாத விசாரணைப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருhவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். பியகம பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் மாவீரர் தின நிகழ்வுகளை நடத்தியமை குறித்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மாவீரர் தின நிகழ்வுகள் சட்டவிரோதமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கமாகும் எனவும் அது ஓர் பயங்கரவாத இயக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரபாகரனின் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தால், கேக் வெட்டியிருந்தால் அது குறித்து விசாரணை நடத்துமாறு நாம் பணிப்புரை விடுத்துள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படுவர் என தெரிவித்துள்ளார். தென் இந்தியாவில் இடம்பெற்ற சுவரொட்டிகள் தொடர்பில் சமூக ஊடக வலையமைப்புக்களில் பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்கள் கைதாகலாம்?
Nov 28, 2017 @ 05:03
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புகைப்படங்களை பயன்படுத்தி, மாவீரர் தினத்தை அனுஷ்டித்தவர்களைக் கைதுசெய்வது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்த்தன தெரிவித்துள்ளர். இதுபோன்ற செயற்பாடுகள் சட்டவிரோதமானது எனவும் தீவிரவாத விசாரணைப் பிரிவினரால் இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.