குளோபல் தமிழ்ச்செய்தியாளர்
கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட உதயநகர் கிழக்கில் கழிவு நீரை முறையாக அகற்றாது வீதியில் விட்ட வெதுப்பகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வெதுப்பகத்தின் கழிவு நீர் குழாய் பொது மக்கள் பயன்படுத்தும் வீதியில் வெதுப்பக விற்பனை நிலையம் முன்பாக அமைக்கப்பட்டுள்ளது. குறித்த கழிவு நீர் குழி உடைந்து துர்நாற்றத்துடன் நீர் வீதியில் வழிந்தோடிய நிலையில் பல வாரங்களாக காணப்பட்டுள்ளன. இது பிரதேச பொது மக்களால் உடனடியாக கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் க.கம்சநாதனின் கவனத்திற்கு கொண்டுவந்தமையினை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
இந்தநிலையில் குறித்த வெதுப்பகத்திற்கு கடுமையாக எச்சரித்த அவர் உடனடியாக பிரதேச சபையின் கழிவு அகற்றும் வாகனத்தை வரவழைத்து கழிவு நீரை அகற்றியதோடு, பிரதேச சபைக்கு ஏற்பட்ட செலவு தொகையான பதினையாயிரம் ரூபாவினையும் செலுத்துமாறு அறிவித்துள்ளார்.