குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தமிழ் அரசியல் கைதிகளின் வழக்கினை வவுனியா மேல் நீதிமன்றுக்கு மாற்று மாறு கோரி கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் மனு மீதான விசாரணை எதிர்வரும் 12ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளான மதியரசன் சுலக்சன் , கணேசன் தர்சன் , இராசதுரை திருவருள் ஆகியோரின் வழக்கு வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் சாட்சியங்களின் பாதுகாப்பு கருதி சட்டமா அதிபர் திணைக்களத்தினால் வழக்கு விசாரணைகள் அனுராதபுர மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டன.
அதனை எதிர்த்து கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனுவின் மீதான விசாரணை இன்றைய தினம் எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் , இரு சாட்சியங்களை தம்மால் தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்களை தொடர்பு மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என கோரினார்கள்.
அதனை அடுத்து கால அவகாசம் வழங்கிய மன்று எதிர்வரும் 12ஆம் திகதி வரைக்கும் மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்தது.