Home இலங்கைமாவீரர் நாளை அனுஸ்டித்தவர்களை கைது செய்ய மாட்டார்கள். – சி.வி. நம்பிக்கை.

மாவீரர் நாளை அனுஸ்டித்தவர்களை கைது செய்ய மாட்டார்கள். – சி.வி. நம்பிக்கை.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

மாவீரர் நாளை அனுஸ்டித்தவர்கள் , விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படங்களை வைத்திருந்தவர்களை ஒரு போதும் கைது செய்ய மாட்டார்கள் என நம்புகின்றேன். என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,

இது தெற்கத்தைய மக்களுக்கு தாங்களும் விழிப்பாக இருக்கின்றோம் என்பதனை கூறுவதற்காக அவர்கள் அவ்வாறு கூறிக்கொண்டார்கள் என்றே நம்புகின்றேன். ஏனெனில் அந்த கூட்டங்களை நடாத்துவதற்கும் மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கும் அனுமதித்துள்ளார்கள். இல்லை என்றால் ராஜபக்சே காலத்தில் எவ்வாறு தடை விதித்தார்களோ அவ்வாறு தடை விதித்து இருப்பார்கள். எனவே இது ஒரு வெறும் குரைப்பு போலவே தோன்றுகின்றது. ஆகவே இது கடிக்காது என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More