கடந்த ஆண்டில் மலேரியா காய்ச்சலால் அதிக அளவில் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தில் உள்ளதாக உலக சுதாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கடந்த 2016-ம் ஆண்டில் உலகம் முழுவதும் 21.6 கோடி பேர் மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டதாகவும் இதில் 80 சதவீதமானோர் இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளைச் சேர்ந்தவர்களள் எனவும் தெரிவிக்கப்பட்டள்ளது. இதில் நைஜீரியா முதலிடத்திலும், கொங்கோ 2-ம் இடத்திலும் இந்தியா 3-ம் இடத்திலும் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மலேரியா காய்ச்சலைக் கண்காணிக்கும் முறையில் காணப்படும் குறைபாடே இந்த நாடுகளில் பாதிப்பு அதிகமாக இருப்பதற்கு காரணமாக உள்ளதெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு இந்தியாவில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 8 சதவீதமானோருக்கு மட்டுமே சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் மலேரியா காய்ச்சல் காரணமாக கடந்த ஆண்டில் 4.45 லட்சம் பேர் உயிரிழந்தனர். இந்தியாவில் மட்டும் கடந்த ஆண்டில் 331 பேர் உயிரிழந்தனர் எனவும் உலக சுதாதார அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.