நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மெதுவாக பந்து வீசியதன் காரணமாக, 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கு மேற்கிந்திய தீவுகள் அணித் தலைவர் ஹோல்டருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
கடந்த முதலாம் திகதி நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ; நியூசிலாந்து இன்னிங்ஸ் வெற்றி பெற்றிருந்தது. இந்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணிப்பந்து வீச்சாளர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் 3 ஓவர் குறைவாக வீசப்பட்டதனால் ஒரு ஓவருக்கு சம்பளத்தில் 10 சதவீதம் என மேற்கிந்திய தீவுகள் வீரர்களுக்கு தலா 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது. அதேவேளை அணித்தலவர் ஹோல்டருக்கு 60 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதுடன் 2-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.