154
இந்தியாவின் உத்தராகண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகியுள்ளதுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று புதன்கிழமை இரவு 8.45 மணியளவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக டெல்லி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் மேலும், அலுவலகத்தில் வேலை செய்பவர்களும் அங்கிருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Spread the love