166
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய கிழக்கு நாடுகளை விடவும் கொங்கோவில் இடம்பெயர் மக்களின் பிரச்சினைகள் உக்கிரமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொங்கோவில் இடம்பெற்று வரும் பிரச்சினை காரணமாக 1.7 மில்லியன் மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். மிகப் பாரிய பிரச்சினையாக இந்தப் பிரச்சினை கருதப்படுகின்றது.
யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர் பிரச்சினை மிகவும் மோசமாக காணப்படும் நாடுகளில் கொங்கோ முன்னணி வகிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிரியா, ஏமன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளை விடவும் கொங்கோவில் அதிகளவிலானவர்கள் இடம்பெயர்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Spread the love