Home இலங்கைவளிமண்டலத் திணைக்களத்தில் தமிழ் புறக்கணிப்பா – நாடாளுமன்றில் டக்ளஸ் கேள்வி!

வளிமண்டலத் திணைக்களத்தில் தமிழ் புறக்கணிப்பா – நாடாளுமன்றில் டக்ளஸ் கேள்வி!

by admin


காலநிலை சீர்கேடுகளால் ஏற்படும் கடும் காற்று கடும் மழை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றதொரு நிலையில் இவை தொடர்பிலானமுன்னறிவித்தல்கள் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலேயே வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்பட்டு வருவதுடன் தமிழ் மொழி புறக்கணிக்கப்படவது ஏன் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி எழுப்பியுள்ளார். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம்   டக்ளஸ்  குறித்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

வளிமண்டளவியல் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை எடுத்துக் கொண்டாலும் இதே நிலைமையே காணப்படுகின்றது. ‘வளிமண்டலவியல்திணைக்களம் – இலங்கை’ என்ற தமிழ் மொழியிலான தலைப்பே எழுத்துப் பிழைகளுடன் காணப்படுவதுடன் தொடர் பயன்பாடு இன்றியும் முன்னறிவித்தல்கள்இன்றியுமே காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களத்தில் இத்தகைய நிலைமை ஏற்பட தமிழ் தெரிந்த அதிகாரிகள் இன்மையே காரணம் எனக் கூறப்படுகின்றது. அதாவதுஇத்திணைக்களத்திற்கு குறைந்தபட்சம் தமிழ் தெரிந்த அதிகாரிகள் 4 பேராவது இருக்க வேண்டிய நிலையில் குறிப்பிட்ட கடமைக்காக ஒருவருமே இல்லை என்றேதெரிய வருகின்றது.

இத்தகைய நிலையினை மாற்றும் வகையில் வளிமண்டளவியல் திணைக்களத்திற்கு போதிய தமிழ் அதிகாரிகளை நியிமிப்பதற்கும் தமிழ் மொழி மூலமாக காலநிலைமாற்றங்கள் தொடர்பில் உடனுக்குடன் முன்னறிவித்தல்களை வழங்குவதற்கும் மேற்படித் திணைக்களத்தின் தமிழ் மொழி மூலமான இணையத்தளத்தினை முறையாகசெயற்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க முடியுமா? என கௌரவ அமைச்சர் அனுர பிரியதர்சன யாப்பாவிடம் கேள்வி எழப்பியுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More