177
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், பண்டிகை கொண்டாட சென்ற 21 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 70 பேர், பிர் பதாய் என்ற பகுதியில் உள்ள சூஃபி மசூதியில் பண்டிகையை கொண்டாட படகில் சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக பாரம் தாங்காமல் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புக்குழுவினர் சென்று நீரில் தத்தளித்தவர்களை மீட்டுள்ளனர். எனினும் மீட்புப்படையினர் வர தாமதம் ஆனதால், 21 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love