குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய நாடுகள் அமைப்பில் முழு உறுப்புரிமை பெற்றுக் கொள்வதற்கு பலஸ்தீனத்திற்கு பூரண ஆதரவளிக்கப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார். பலஸ்தீன தூதரகக் காரியாலயம் அமைப்பதற்கு இலங்கை அரசாங்கம் காணித்துண்டு ஒன்றை வழங்கியுள்ளது. கொழும்பு 7, ஹேவா லேனில் அமைந்துள்ள காணிக்கான உறுதிப்பத்திரம் வெளிவிவகார அமைச்சரினால், பாலஸ்தீன தூதுவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க ஆகியோரும் இணைந்து கொண்டிருந்தனர். இந்தநிலையிலேயே இலங்கைக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.