Home இலங்கைஆசனப்பங்கீடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே தீர்வு எட்டப்பட்டது:-

ஆசனப்பங்கீடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே தீர்வு எட்டப்பட்டது:-

by admin

உள்ளூராட்சித் தேர்தல் ஆசனப்பங்கீடு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கு இடையே காணப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை. சேனாதிராசா, ரெலோவின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், புளொட்டின் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் இணைந்து இன்று பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

”உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை. சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்களுடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சுமுகமான தீர்வு எட்டப்பட்டுள்ளது.

தேர்தலுக்கான விண்ணப்பங்கள் தமிழ் அரசுக் கட்சியின் பெயரிலும், சின்னத்திலும் (வீடு) கையளிக்கப்படும்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கீழ் வீடு சின்னத்தில் போட்டியிடும், வேட்பாளர்களுக்கு முழு ஆதரவு நல்குமாறு வடக்கு கிழக்கில் உள்ள வாக்காளர்களிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது” என்றும் கூட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More