Home இந்தியா நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் ஜார்கண்ட் முதலமைச்சர் குற்றவாளி என அறிவிப்பு:-

நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கில் முன்னாள் ஜார்கண்ட் முதலமைச்சர் குற்றவாளி என அறிவிப்பு:-

by admin

நிலக்கரி சுரங்கங்களை முறைகேடாக ஒதுக்கீடு செய்த வழக்கில் ஜார்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா உட்பட 6 பேரை குற்றவாளிகள் என சி.பி.ஐ நீதிமன்றம்; தீர்ப்பளித்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த 2006 -2008 காலப்பகுதியில் முதலமைச்சiராக இருந்த மதுகோடா தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நிலக்கரி சுரங்கங்களை மேற்குவங்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு முறைகேடாக ஒதுக்கீடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடர்பில் மதுகோடா உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ., அதுதொடர்பாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இன்று தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இதில் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா மற்றும் முன்னாள் நிலக்கரி துறை செயலாளர் ஹெச்.சி.குப்தா உள்பட 6 பேர் குற்றவாளிகள் என நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அதேவேளை நான்கு பேர் குற்றமற்றவர்கள் என்று கூறி அவர்களை விடுவிப்பதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் நாளை அறிவிக்கப்பட இருப்பதாகவும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளர்h.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More