குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவின் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என புதுடெல்லி நம்பிக்கை வெளியிட்டுள்ளது. பிராந்திய வலய நாடுகள் தொடர்பிலான கரிசனையுடன் இலங்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ராவீஸ் குமார் தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிடம் வழங்கப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
இலங்கையுடனான இந்தியாவின் உறவுகள் வேறும் மூன்றாம் நாடு ஒன்றில் தங்கியில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை மற்றும் பிராந்திய வலயத்தின் பாதுகாப்பு குறித்து இந்தியா எந்த நேரத்திலும் கரிசனையுடன் செயற்பட்டு வருவதாகவும் இதேவிதமான கரிசனையை இலங்கையும் கொண்டிருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.