Home இந்தியாதமிழகத்தின் செங்குன்றத்தில் கொத்தடிமைகள் 17 பேர் மீட்கப்பட்டனர்…

தமிழகத்தின் செங்குன்றத்தில் கொத்தடிமைகள் 17 பேர் மீட்கப்பட்டனர்…

by admin


செங்குன்றம் அருகே அரிசி ஆலையில் கொத்தடிமையாக இருந்த 17 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான அரிசி ஆலையில் கொத்தடிமைகள் இருப்பதாக சென்னை எழும்பூரில் உள்ள சர்வதேச நீதி குழும தொண்டு நிறுவன நிர்வாகி ஒருவருக்கு கிடைத்த தகவலுக்கமைய இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்டவர்கள் 8 வருடங்களாக ஆலையில் வேலை செய்து வருவதாகவும், சொந்த ஊருக்கு அனுப்பாமல் ஆலையிலேயே கொத்தடிமைகளாக அடைத்து வைத்திருப்பதாகவும் விசாரணைகளின் போது அவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து 17 பேரும் மீட்கப்பட்டு அவர்கள் அரசு உதவிகளுடன் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

கோப்பு படம்…

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More