பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்சியை சந்தித்தன் மூலம் தனது கனவு நனவானகியதாக சிரிய அகதியான மாற்றுத்திறனாளிப்பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். சிரியாவில் நடைபெறும் உள்நாட்டு போர் காரணமாக பெருமூளைப் பக்கவாதத்தால் பாதித்த நுஜீன் முஸ்தபா என்ற 18-வது இளம்பெண் தனது சசோதரியுடன் அலெப்போ நகரில் இருந்து ஜெர்மனிக்கு சென்று அங்கு வசித்து வருகின்றார்.
தீவிர கால்பந்து ரசிகையான நுஜீன் , லயனல்மெஸ்சியை ஒருமுறையாவது நேரில் சந்தித்து விட வேண்டும் என ஆசைப்பட்டார்.
இந்தநிலையில் அவரது விருப்பம் தொடர்பில் பார்சிலோனா நிர்வாகத்திற்கு தெரிவிக்கப்பட்டதனைத் தொடர்ந்து பார்சிலோனா கழக நிர்வாகத்தினர் மெஸ்சியின் ஆட்டத்தை நுஜீன் நேரடியாக பார்ப்பதற்கு ஏற்பாடு செய்தது. இந்தவகையில் நுஜீன் கடந்த டிசம்பர் 2ம்திகதி செல்டாவிற்கு எதிராக பார்சிலோனாவின் போட்டியை காண்பதற்கு பார்சிலோனா ஏற்பாடு செய்திருந்தது.
மெஸ்சி ஆட்டத்தை நேரில் கண்டு மகிழ்ந்த நுஜீன் தனது கனவு நனவாகியுள்ளது எனவும மெஸ்சியை பார்க்கையில் குழந்தை முகம் போன்று உள்ளதாகவும் 30 வயதாகிவிட்டாலும் இளம் வீரரைப் போல் உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் மெஸ்சி மிகவம் கூச்சம் சுபாவம் உடையவர் எனவும் அதில் இருந்து இன்னும் மாறவே இல்லை எனவும் தெரிவித்த அவர் இங்கிலாந்து மகாராணியை சந்திக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.