குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் செயற்பாடுகள் குறித்து சீனா கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் பனிப்போர் மனோநிலை ஆபத்தானது என சீனா விமர்சனம் செய்துள்ளது. அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கை வெளியீடு தொடர்பில் சீனா கடுமையான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் சீனாவையும் ரஸ்யாவையும் அமெரிக்கா விமர்சனம் செய்துள்ளதாகவும், இது தேவையில்லாத விடயம் எனவும் தெரிவித்துள்ளது.
திரிபுபடுத்தப்பட்ட பிழையான தகவல்களின் அடிப்படையில் அறிக்கை வெளியிடுவதன் மூலம் எந்தவொரு நாடும் வெற்றியடையாது என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவா சானிங் ( Hua Chunying )தெரிவித்துள்ளார். சீனாவின் சர்வதேச தந்திரோபாய அணுகுமுறைகளை சிதைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, புதிய அறிக்கையில் ரஸ்யாவை அச்சுறுத்தலாக குறிப்பிடப்பட்டுள்ளதனை ஏற்றுக்கொள்ள முடியாது என ரஸ்யா தெரிவித்துள்ளது.