யாழ் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இன்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளது. சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அங்கஜன் இராமநாதன் தலைமையிலான உறுப்பினர்கள் யாழ். மாவட்ட தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று முற்பகல் 11 மணிக்கு கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர் யாழிலுள்ள 17 உள்ளூராட்சி மன்றங்களில் சாவகச்சேரி நகர சபைக்கு ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று நண்பகலுடன் நிறைவடையவுள்ளது. அதேவேளை நாளை வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கையும் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் கட்டுப்பணம் செலுத்தியது…
201
Spread the love