164
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தெற்கை சேர்ந்த ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்ட பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சே தனது முகநூலில் கவலை தெரிவித்துள்ளார்.
உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர், ஊடகவியலாளர் சுசந்த பண்டாரவைத் தாக்கி கடந்த 2 மாதங்களில் சுதந்திர பொலிஸ் கமிஷனோ அல்லது ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வேறு எந்தப் பிரிவோ எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. இதுவல்ல நல்லாட்சி், இதுவல்ல பத்திரிகை சுதந்திரம் என தனது முகநூலில் மூன்று மொழிகளிலும் பதிவிட்டு உள்ளார்
Spread the love