Home இந்தியாதென் ஆபிரிக்காவில் காருடன் கடத்தப்பட்ட இந்திய வர்த்தகர் விடுதலை…

தென் ஆபிரிக்காவில் காருடன் கடத்தப்பட்ட இந்திய வர்த்தகர் விடுதலை…

by admin

தென் ஆபிரிக்காவில் காருடன் கடத்தப்பட்ட இந்திய வர்த்தகர் 137 நாட்களுக்கு பின் ஒலிபேன்ட்ஸ் போன்டின் என்ற இடத்தில் வைத்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்காவில் பிரிடோரியா பகுதியை சேர்ந்த 76 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒமர்காரிம் அங்கு பிரபல வர்த்தகராக திகழ்கிறார்.

இந்த நிலையில் கடந்த ஓகஸ்டு 3ம் திகதி பிரிடோரியாவில் உள்ள தனது வர்த்தக நிறுவனத்தில் இருந்து காரில் புறப்பட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவேளை அவர் இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டிருந்தார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தேடுதல் மேற்கொண்டும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் கடத்தப்பட்ட 137 நாட்களுக்கு பின் ஒலிபேன்ட்ஸ் போன்டின் என்ற இடத்தில் வைத்து அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். எனினும் அவரை யார் கடத்தியது என்பது தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More