குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் ஆஜராகத் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிக் குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகளில் பங்கேற்கத் தயார் என தெரிவித்துள்ள அவர் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த கோப் குழுவின் அறிக்கை அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்த ஆஜராகுமாறு அழைத்தால் தாம் விசாரணைகளில் பங்கேற்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.