குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை விவகாரத்தில் இந்திய அரசாங்கம் உரிய கொள்கைகளை பின்பற்றத் தவறியுள்ளதாக இந்திய காங்கிரஸ் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கத்தின் இலங்கை குறித்த கொள்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை என காங்கிரஸின் பேச்சாளர் மானிஸ் திவாரி தெரிவித்துள்ளார். இலங்கை குறித்த வெளியுறவுக் கொள்கை சரியாக வகுக்கப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையில் சீனாவின் பிரசன்னம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்திய அரசாங்கத்தின் பிழையான கொள்கைகளினால் இந்தியா தனிமைப்படும் நிலையை அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.