Home இலங்கைஇலங்கையரை கைது செய்ய சர்வதேச காவற்துறை சிகப்பு எச்சரிக்கை விடுத்தது…

இலங்கையரை கைது செய்ய சர்வதேச காவற்துறை சிகப்பு எச்சரிக்கை விடுத்தது…

by admin


இலங்கையரான கொஸ்கொட சுஜீ என்பவரை கைதுசெய்ய சர்வதேச காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர். 33 வயதான கொஸ்கொட சுஜீயை கைது செய்ய, இலங்கை – சர்வதேச காவல்துறையினரினர் உதவியை உத்தயோகப்பூர்வமாக நாடியுள்ளதால், சர்வதேச காவல்துறையினர் இந்த சிவப்பு எச்சரிக்கையினை பிறப்பித்துள்ளனர்.

கொலைக் குற்றச்சாட்டு ஒன்று தொடர்பில் தேடப்படும் நபர் என நீதிமன்றினால் கொஸ்கொட சுஜியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னரும் இரு இலங்கையர்களைக் கைதுசெய்ய வேறு இரண்டு நாடுகளின் வேண்டுகோளுக்கமைய சர்வதேச காவல்துறையினர் சிவப்பு எச்சரிக்கையை பிறப்பித்திருந்தனர்.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை அமைதியாக நடத்தவும், தெற்கில் பாதாள குழுக்களின் நடவடிக்கைகளை தடுக்கும் நோக்கிலும், இலங்கை இவ்வாறு சர்வதேச காவல்துறையினரின் ஒத்துழைப்பினை நாடியுளளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More