Home இந்தியாயாழ்ப்பாணத்தில் விடுதலையான 16 இந்திய மீனவர்களும் இந்தியா பயணம்…

யாழ்ப்பாணத்தில் விடுதலையான 16 இந்திய மீனவர்களும் இந்தியா பயணம்…

by admin

யாழ்ப்பாணம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்கள் இன்று மாலை இந்தியா செல்கின்றனர். இலங்கை கடற்படையினர் இன்று அவர்களை இந்திய கடற்படையினரிடம் ஒப்படைக்கவுள்ளநிலையில் மாலையில் இந்தியா செல்கின்றனர்.

ஏல்லை தாண்டி மீன்பிடித்ததாக தெரிவித்து கைது செய்யப்பட்ட புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச்சேர்ந்த குறித்த 16 இந்திய மீனவர்களும் சில தினங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணம் சிறையில் உள்ள 56 தமிழக மீனவர்கள் நேற்றையதினம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் ஜனவரி 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குhறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More