191
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் உள்ள கிளாலி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மணல் அகழ்வைத் தடுக்ககோரி கிராமவாசி ஒருவர் கூரை மீது ஏறி போராட்டத்தை மேற்கொண்டுள்ளார்.
இன்று(27) காலை கிளாலி பாடசாலைக்கு முன்பாக உள்ள பச்சிலைப்பள்ளி பல நோக்கு கூட்டுறவுச் சங்க கிளையின் கூரை மீது ஏறி திருச்செல்வம் இராஜேஸ்வரன் என்பவர் போராட்டத்தில் ஈடுப்பட்டிருந்தார். இவரது போராட்டம் இரவு வரை தொடர்ந்துள்ளது
கிராமத்தில் உள்ள ஒருவர் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பாரியளவில் மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றார். இவா் அரசியல் கட்சி ஒன்றினதும், காவல்துறையினரதும் அதரவுடன் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுப்பட்டு வருகின்றார். கடல் மட்டத்தை விடவும் ஆழமாகமணல் அகழப்பட்டுள்ளது. இது எதிர்காலத்தில் கடல் நீர் கிராமங்களுக்கு உட்புகுந்து எமது கிராமம் உவராக மாற்றமடையக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர், மற்றும் கிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள முல்லைத்தீவுக்கான பிரதி காவல் துறை அதிபர் அலுவலகத்தில் முறைப்பாடு செய்தும் அவர்களும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் எனவேதான் இறுதியாக தான் இவ்வாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட தீர்மானித்து போராட்டத்தை மேற்கொள்வமதாக திருச்செல்வம் இராஜேஸ்வரன் தெரிவித்தார்.
Spread the love