124
69 இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளன. இந்திய ஊடகமொன்று இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டில் இதுவரையில் 89 மீனவர்களை இலங்கை அரசாங்கம் விடுதலை செய்துள்ளது. மேலும் 71 மீனவர்கள் தொடர்ந்தும் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் அத்து மீறி இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அதிகளவான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love