182
குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் சுதந்திரக் கட்சியின் உறுப்பினருமான ஜீ.எல்.பீரிஸ் தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளர் தீர்மானம் எடுப்பார் என ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார். கட்சியொன்றில் அங்கம் வகித்துக் கொண்டே புதிய கட்சியொன்றின் தவிசாளர் பதவியை ஜீ.எல்.பீரிஸ் வகிக்கின்றார். இந்த விடயம் தொடர்பில் கட்சியின் பொதுச் செயலாளரும் மத்திய செயற்குழுவும் தீர்மானம் எடுக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் இன்றைய தினம் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Spread the love