குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு
குற்றம் செய்யவில்லை என்றால் நான் ஏன் தப்பிச் செல்ல வேண்டுமென மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாட்டுப் பயணமொன்றை மேற்கொண்டு நாடு திரும்பிய போது அவர் ஊடகவியலாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார்.
நெருங்கிய நண்பர் ஒருவரின் குடும்ப திருமண நிகழ்வில் பங்கேற்பதற்காக தாம் இவ்வாறு வெளிநாட்டு பயணமொன்றை மேற்கொண்டதாகவும் குற்றம் இழைக்காவிட்டால் நாட்டை விட்டு தப்பிச் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சட்ட மா அதிபரின் தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாகவும் இதுவரையில் எவரும் தன்னை குற்றவாளி என பெயரிடப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.